search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்கோட் டெஸ்ட்"

    பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு அவருக்கு நெருக்கடி அளிக்கக் கூடாது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ViratKohli #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரரான பிரத்வி ஷா அறிமுக இன்னிங்சிஸ்லேயே சதம் அடித்து அசத்தினார். அதுவும் 99 பந்தில் சதம் விளாசினார். அவரது ஸ்டைல், ஆட்டம் ஆகியவற்றை வைத்து சேவாக் மற்றும் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு நெருக்கடி அளிக்க வேண்டாம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாம் பிரித்வி ஷாவை யாருடனும் ஒப்பிடக் கூடாது. அவருக்கு நெருக்கடி உண்டாகும் வகையில் நாம் ஒரு இடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதில் இருந்து விலகி அவர் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். மெதுவாக அவர் வளர வேண்டும். அதில் நமக்கு நம்பிக்கை வேண்டும்.



    இதுவரை அவரை ஒரு வீரருடன் ஒப்பிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், இளம் வீரர்களுக்கு அவருடைய திறமையில் வளர்ந்து வர நாம் இடம் அளிக்க வேண்டும். பிரித்வி ஷா அபாரமான திறமையை பெற்றுள்ளார். அதை நாம் எல்லோரும் பார்த்துள்ளோம்.

    அவர் முதல் ஆட்டத்தில் என்ன செய்தாரோ அதை எல்லா போட்டிகளிலும் செய்ய வேண்டும் என்பதை நான் எல்லோரும் நினைக்க வேண்டும். அவர் சூழ்நிலையை நன்றாக அறிந்துள்ளார். அவருடைய விஷயத்தில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்’’ என்றார்.
    ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் ஆலன் டொனால்டை பின்னுக்குத் தள்ளினார் அஸ்வின். #INDvWI #Ashwin
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆக அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். அவர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இந்த டெஸ்டிற்கு முன் அஸ்வின் 327 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இதில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 331 விக்கெட்டுக்களுடன் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டெனால்டை முந்தியுள்ளார்.

    ஆலன் டொனால்டு 72 டெஸ்டில் 330 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 24-வது இடத்தில் இருந்தார். அஸ்வின் தற்போது 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் அஸ்வின் தற்போது 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 333 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    சர்வதேச அளவில் 24-வது இடத்தை பிடித்துள்ள அஸ்வின், இந்திய அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    சர்வதேச சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வெட்டோரி ஆகியோர் முறையே ஒன்று முதல் ஆறு இடங்களை பிடித்துள்ளனர்.
    மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார். #INDvWI #KuldeepYadav
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்னில் சுருண்டது. அஸ்வின் நான்கு விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பாலோ-ஆன் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. குல்தீப் யாதவின் அபார பந்து வீச்சால் 196 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ், மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐந்து விக்கெடடுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையைப் படைத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் புவனேஸ்வர் குமார் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
    ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங் தேர்வு செய்தது. பிரித்வி ஷா (134), விராட் கோலி (139), ரவிந்திர ஜடேஜா (100) ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது. சேஸ் 53 ரன்களும், கீமோ பால் 47 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    181 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாலோ-ஆன் ஆகி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் தொடக்க வீரரான பொவேல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். மற்ற வீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 196 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரனகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    பொவேல் 93 பந்தில் 83 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்களும், ஜடேஜா மூன்று விக்கெட்டும், அஸ்வின் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஆட்டம் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.
    ராஜ்கோட்டில் இந்தியா 649 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்ததே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.



    பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.



    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இந்தியாவின் 7-வது அதிகபட்ச ஸ்கோராகும்.
    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா சதத்தால் இந்தியா 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது #INDvWI #Jadeja #ViratKohli
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. அறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தால் இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 ரன்னுடனும், ரிஷப் பந்த் 17 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரிஷப் பந்த் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 84 பந்தில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த ஜடேஜா தனது சொந்த மைதானத்தில் ஆதிரடியை வெளிப்படுத்தினார். விராட் கோலி (139), அஸ்வின் (7), குல்தீப் யாதவ் (12), உமேஷ் யாதவ் (22) ஆதரவு கொடுக்க ஜடேஜா 128 பந்தில் 99 ரன்னை தொட்டார். 150-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல் சதத்தை அடித்தார் ஜடேஜா.

    149.5 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 100 ரன்னுடனும், முகமது ஷமி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தேவேந்திர பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறும் நிலையில் அந்த மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் இது என்பது குறிப்பிடத்தக்கது. #INDvWI #RajkotTest
    2009-ம் ஆண்டு கட்டப்பட்ட ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. நாளை தொடங்க இருக்கும் போட்டி அந்த மைதானத்தில் 2-வது டெஸ்ட் ஆகும்.

    2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா- இங்கிலாந்து அணிகள் அங்கு மோதிய டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து வீரர்களில் குக் (130 ரன்), பென் ஸ்டோக்ஸ் (128), ஜோரூட் (124), மொய்ன்அலி (117) ஆகியோரும், இந்திய வீரர்களில் முரளி விஜய் (126), புஜாரா (124) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

    ஆதில் ரஷீத் (இங்கிலாந்து) அதிகபட்சமாக 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவர் 114 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சாகும்.

    ராஜ்கோட் மைதானத்தில் 2 ஒருநாள் போட்டியும், இரண்டு 20 ஓவர் போட்டியும் நடந்துள்ளது. #INDvWI #RajkotTest
    ×